புனேயின் முல்ஷி தாலுகாவில் உள்ள கதக்வாடி குக்கிராமத்தைச் சேர்ந்த முக்தாபாய் உபே, வேலை தடி தொலைதூரம் சென்ற கணவனின் பிரிவு குறித்தும் அவன் மனைவியின் காதல் குறித்தும் ஒன்பது ஓவி (கவிதை) பாடல்களை பாடியுள்ளார்.

இந்த வருடம் எங்களுக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லை

ஓ பெண்ணே, என் கணவர் வேலை தேடி தொலை தூரம் சென்றுள்ளார்

என்னை தனியே விட்டுவிட்டு, வெகு தூரம் சென்றுள்ளார்

அங்கு அவரை கவனிக்க கூட யாரும் இல்லை

ஏப்ரல் மாதம் முக்தாபாய் உபேயிடம் நாங்கள் தொலைபேசியில் பேசியபோது, “ஆமாம், இந்த பாடலை பல வருடங்களுக்கு முன் பாடியது எனக்கு நியாபகம் இருக்கிறது” என்றார். புனேயின் முல்ஷி தாலுகாவிலுள்ள கதக்வாடி கிராமத்தில் வசித்து வரும் முக்தாபாய், க்ரிண்ட்மில் பாடல்கள் திட்ட (ஜிஎஸ்பி) குழுவிற்காக 1996-ல் இந்த ஓவியை பாடினார்.

தற்போதைய கொரோனா (கோவிட்-19) நோய்தொற்று மற்றும் ஊரடங்கு சமயத்தில், தங்கள் கிராமத்தில் உள்ள குடும்பங்களை பிரிந்து வாடும் இந்தியா முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் அணுபவங்களை இருபது வருடங்களுக்கு முன் பாடிய ஒன்பது செய்யுள்கள் நமக்கு நியாபகப்படுத்துகிறது. இந்த ஓவியில் கூறப்படும் பிரிந்து போன கணவனைப் போல், புலம்பெயர் தொழிலாளர்களும் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளை விடுத்து வேலை தேடி தூரத்தில் உள்ள நகரத்திற்குச் சென்றுள்ளனர்.

1980-களில் இயந்திர ஆலைகள் இந்திய கிராமங்களை அடைவதற்கு முன்னர், வீட்டிலுள்ள பெண்கள் தினசரி தானியங்களை அரைத்து மாவாக்க உரல்களை பயன்படுத்துவர். இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றுசேர்ந்து சமயலறையிலோ அல்லது அதற்கருகிலோ தனிமையில் பாடியபடி வேலை செய்வார்கள். அங்கு எந்த தொந்தரவுமின்றி, சுதந்திரமாக, சமூக கட்டுப்பாடுகளைக் கடந்து தங்களை வெளிப்படுத்துவார்கள். எளிமையாக சொன்னால், உரலின் ஓசைக்கும் தங்கள் கையில் உள்ள கண்ணாடி வளையல்களின் சலப்சலப்பொலிக்கும் ஏற்ப ஓவி பாடுவார்கள்.

இந்த ஓவியை திருமணமனமான புதிதில் தனது மாமியாரிடம் இருந்து கற்றுக் கொண்டார் முக்தாபாய். இந்த செய்யுள்கள் பெண்களின் காதலையும் கணவனுக்காக ஏங்கி தவிக்கும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. 1996-ம் ஆண்டு இதைப் பாடியபோது முக்தாபாய்-க்கு 40 வயது ஆகியிருந்தது.

முத்துக்கள் போல் மின்னும் கணவரின் கண்கள் மற்றும் ஆளி மலர் போல் நீல நிறத்தில் இருக்கும் அவருடைய தோல் என ஓவியில் விவரித்திருப்பதைப் பற்றி நாங்கள் பேசியபோது சிரிக்கிறார் 64 வயதாகும் முக்தாபாய். அவர் கூறுகையில், “நான் ஆளி பூக்களை பார்த்ததேயில்லை. ஆனாலும் ஓவியில் கணவனை மிகவும் பாசத்தோடு புகழ்கிறாள் மனைவி”.

Left: Muktabai and Gulabbhau Ubhe are farmers in Khadakwadi. Right: Muktabai and others in the assembly hall of the Ram temple (file photo)
PHOTO • Amol Ubhe
Left: Muktabai and Gulabbhau Ubhe are farmers in Khadakwadi. Right: Muktabai and others in the assembly hall of the Ram temple (file photo)
PHOTO • Namita Waikar

இடது: முக்தாபாயும் குலபாவு உபேயும் கதக்வாடியில் விவசாயிகளாக உள்ளார்கள். வலது: முக்தாபாயும் மற்றவர்களும் ராமர் கோயிலின் மண்டபத்தில் உள்ளனர் (பழைய படம்)

ஊரடங்கு மற்றும் தொற்றுநோய் குறித்து நாங்கள் பேசினோம். “கொரோனாவால் எல்லாம் மூடப்பட்டுள்ளது. எங்கள் நிலத்தில் நானும் என் கணவரும் வேலை செய்து வந்தோம். இப்போது எங்கள் இருவருக்கும் வயதாகி விட்டது. எங்களால் முடிந்த சிறு வேலைகளை செய்கிறோம்” என்கிறார். கதக்வாடி குக்கிராமத்தில் அவருக்கும் 60 வயதைக் கடந்த அவருடைய கணவர் குலபாயு உபேவுக்கும் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இவர்களது மகன் அமோல், உரவாடேவில் – இவர்களது கிராமத்திலிருந்து 20கிமீ தொலைவில் உள்ளது - உள்ள ஆட்டோ உதிரிபாக தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். இவர்களின் மூன்று மகள்களும் திருமணமாகி புனே மாவட்டத்தின் வேறு வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தன்னுடைய கிராமத்தில் உள்ள சுய உதவிக் குழுவின் தலைவராக இருக்கிறார் முக்தாபாய். “ஆனால், என்னைப் போல பல பெண்களுக்கும் தங்கள் சொந்த நிலத்திலும் வீட்டிலும் வேலை செய்வது போக வேறு நேரம் கிடைப்பதில்லை. எல்லாரிடமும் பணத்தை வசூலித்து வங்கியில் கட்டுவது மட்டுமே என் வேலை. இந்தப் பதவியால் ஒரு பயனும் இல்லை, வெறும் பெயருக்கு மட்டும்தான்”  என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, பாரி ஜிஎஸ்பி குழு கொலவாடேவிற்கு வருகை தந்தபோது, புத்தக வாசிப்பின் மீது தனக்கிருந்த விருப்பத்தை எங்களிடம் கூறினார் முக்தாபாய். “ரஞ்சித் தேசாய் எழுதிய ஸ்ரீராம் யோகி, பாண்டவ் பிரதாப் ஹரி மற்றும் இதர ஆண்மீக நூல்களையும் நான் வாசித்துள்ளேன்” என்றார்.

கதக்வாடியில் உள்ள ராமர் கோயிலின் பெரிய மண்டபத்தில் அவரையும் மற்ற ஐந்து பாடகர்களையும் நாங்கள் சந்தித்தோம். அறையின் மூன்று பக்கங்களிலிருந்து வீசிய காற்று ஏப்ரல் மாத வெயிலுக்கு இதமாக இருந்தது. வெளியில் நின்ற மாமரத்து கிளைகளில் பழங்கள் அசைந்தாடியது. கோடை வெயில் பற்றியும் வரப்போகிற பருவமழை காலத்தைப் பற்றியும் சில ஓவிகளை பெண்கள் பாடினர். இந்தப் பாடல்களை – கோடைக்காலம் குறித்து ஏழு பாடல்களும் மழை குறித்து ஆறு பாடல்களும் -  இரண்டு பகுதிகளாக பாரியில் வெளியிட்டோம்.

சமூக விஞ்ஞானிகளான ஹேமா ராயர்கர் மற்றும் கய் போட்வீன் தலைமையிலான ஜிஎஸ்பி குழுவிற்காக  கொலவாடேவைச் சேர்ந்த 25 பெண்கள் 1,265 பாடல்களைப் பாடினர். ஜனவரி 6, 1996-ல் முக்தாபாய் உபே பாடி பதிவு செய்யப்பட்ட 53 பாடல்களில் ஒன்பது பாடலை இங்கு தருகிறோம்.

வீடியோ பார்க்க: ‘என் கணவர் வேலை தேடி தொலைதூரம் சென்றுள்ளார்…’

முதல் ஓவியில், தன் வீட்டிலுள்ள கடவுளை வணங்கும் மனைவி, தனது குங்குமம் நீடித்து நிலைக்க வேண்டும் என பிராத்தனை செய்கிறாள். இரண்டாவது வரியில், தனக்கு சந்தோஷமான திருமண வாழ்க்கை வேண்டுமென கடவுள் விஷ்னுவின் அடையாளமாக இருக்கும் அத்தி மரத்திடம் பிராத்தனை செய்கிறாள். மூன்றாவது வரியில், அதிகாலை  வானில் தன் வீட்டின் மேலே சுகதேவா (காலை நட்சத்திரத்தின் கடவுள்) வந்து, உடலை வருடும் குளிர்ந்த காற்றை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்.

இந்த வருடம் விளைச்சல் சரியாக இல்லை என்றும் அதனால் தன்னுடைய கணவர் வேலை தேடி தொலைதூரம் சென்றுள்ளார் என்றும் நான்காவது மற்றும் ஐந்தாவது வரிகளில் கூறுகிறார். தொலைதூர பகுதியில் அவரைக் கவனிக்க கூட ஆள் இல்லையே என வருந்துகிறார். அவர் எந்தளவிற்கு தன்னுடைய கணவரை காதலிக்கிறார், எந்தளவிற்கு பிரிந்து வாடுகிறார் என்பதை இந்தப் பாடல் நமக்கு தெரிவிக்கிறது.

ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது வரிகளில் தன் அன்புக்குரியவரை நினைவுகூறுபவள், அவரின் குணநலன்களை விவரிக்கிறாள். அவரின் கண்கள் முத்துக்கள் போல் மின்னும், அவரின் தோல் ஆளி மலர்கள் போல் நீல நிறத்தில் இருக்கும். (பகவான் கிருஷ்னரின் தோல் வண்ணத்தை விவரிக்க ஓவியில் பெரும்பாலும் இந்த மலர்கள் பயன்படுத்தப்படுகிறது) தனது கணவனின் பற்கள் தூய்மையான அரிசி போல் இருக்கும் என பாடுகிறாள். அவன் இல்லாமல், அவள் பித்துப்பிடித்தவள் போல் இருக்கிறாள். அவனுக்கு பிடித்தமான வறுத்த சுண்டல் உலர்ந்து போய் உள்ளது.

கடைசி ஓவியில், திரும்பி வந்துவிடுங்கள் என மன்றாடுகிறாள்: “என் வாழ்க்கையின் வெளிச்சமே, நீங்கள் எப்போது வருவீர்கள்? என் கடவுளின் கடவுளே, நீங்கள் எப்போது வருவீர்கள்?” இதன்மூலம் தன் கணவர் தான் வணங்கும் கடவுளை விட மேலானவர் என பாடகர் நம்மிடம் கூறுகிறார்.

ஒன்பது ஓவியை கேளுங்கள்:

நானோ திருமனமான பெண், என் வீட்டில் உள்ள கடவுளை வணங்குகிறேன்

என் குங்குமம் (கணவர்) நீண்ட நாள் நிலைக்க வேண்டும் என பிராத்திக்கிறேன்

திருமணமான பெண்ணான நான், அத்தி மரத்திடம் வேண்டுகிறேன்

விஷ்னுநாராயன பகவானே, எனக்கு சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை கொடு

அதிகாலை வேளையில், சுகதேவா (காலை நட்சத்திர கடவுள்) வீட்டின் மேலே வந்துள்ளார்

அதிகாலை காற்றுக்கூட உடலுக்கு வேதனை அளிக்கிறதே ஏன்

இந்த வருடம் எங்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை

ஓ பெண்ணே, என் கணவர் தொலைதூரம் சென்றுள்ளார் (வேலை தேடி)

என்னை தனியே விட்டு வெகு தூரம் சென்றுள்ளார்

அவரை கவனிக்க அங்கு யாருமே இல்லை

என் அருமை கணவரே, உங்கள் கண்கள் முத்துக்கள் போல் மின்னுகின்றன

என் அருமை கணவரே, ஆளி மலர்களின் வண்ணம் போல் உங்கள் தோல் இருக்கிறது

என் அருமை கணவரே, உங்கள் பற்கள் தூய்மையான அரிசி போல் உள்ளது

நீங்கள் இல்லாமல் பித்துப்பிடித்தவள் போல் உள்ளேன்

உங்களுக்கு பிடிக்குமென்று பச்சை சுண்டலை வறுத்துள்ளேன்

உன்னிடம் என்ன சொல்ல, ஓ பெண்ணே, அவை எல்லாம் உலர்ந்துவிட்டது

என் வாழ்க்கையின் வெளிச்சமே, நீங்கள் எப்போது வருவீர்கள்?

கடவுளுக்கெல்லாம் என் கடவுளே, நீங்கள் எப்போது வருவீர்கள்?

suvāsīna pujatē mī gharacyā dēvālā
āyuṣya māgatē mī mājhyā kuṅkavālā

suvāsīna pujītē mī pimpaḷācā pāra
viṣṇunārāyaṇa dēvā sukhācā sansāra

jhuñjumuñju jhāla sukhadēva vāḍyā ālā
pahāṭacā vārā kasā jhōmbata aṅgālā

avandāca sāla nāhī āla pīkapāṇī
duradēsī gēlā bāī mājhā gharadhanī

duradēsī gēlā malā ēkalī ṭākūna
titha jīva lāvāyalā nāhī tyālā kōṇa

rāyā ḍōḷyāmandī tujhyā mōtīyāca pāṇī
rāyā tujhā raṅga javasācyā phulāvāṇī

rāyā tujha dāta jasa dhutala tānduḷa
tujhyā bigara rē malā bharala vyākūḷa

tulā āvaḍīto huḷā bhājūna ṭhēvīlā
kāya sāṅgū bāī sārā vāḷūna cālalā

kavāsika yāla mājhyā kuḍītalyā jīvā
kavāsika yāla mājhyā dēvācyā bī dēvā

I am a suvasina [married woman], and worship the god in my house
I pray for the long life of my kunku [husband]

I am a suvasina praying to the pimpal [sacred fig] tree
Lord Vishnunarayan, give me a happy family life

It is early morning, Sukhadeva [god of the morning star] has come above the house
How the early morning breeze is stinging the body

We didn’t get a good harvest this year
O woman, my husband has gone to a faraway place [in search of work]

He has gone far away, leaving me alone
There is no one to care for him there

Dear husband, your eyes shine like the lustre of pearls
Dear husband, your skin is the colour of javas flowers

Dear husband, your teeth are like washed rice
I am distraught and lost without you

I roasted green chickpeas for you, because you like it
What can I tell you, O woman, it is all drying up

When will you come, O light of my life?
When will you come, O god of my gods?

PHOTO • Samyukta Shastri

பாடகர் : முக்தாபாய் உபே

கிராமம் : கொலவாடே

குக்கிராமம் : கதக்வாடி

தாலுகா : முல்ஷி

மாவட்டம் : புனே

சாதி : மராத்தா

தொழில் : விவசாயம்

தேதி : இந்தப் பாடலும் ஒரு சில தகவல்களும் ஜனவரி 6, 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

போஸ்டர்: சின்சிதா மஜி

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar
PARI GSP Team

PARI Grindmill Songs Project Team: Asha Ogale (translation); Bernard Bel (digitisation, database design, development and maintenance); Jitendra Maid (transcription, translation assistance); Namita Waikar (project lead and curation); Rajani Khaladkar (data entry).

Other stories by PARI GSP Team
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja